4:28 AM

தமிழ் இணையம் தரணியெங்கும் வெற்றிநடைபோடும் இவ்வேளையில் தரமான பதிவொன்று வழங்க வந்துள்ளேன்...இப்பதிவு யாருக்கு ? தொலைதொடர்பு தொழில்நுட்பம் (telecom technology) முழுமையாக அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் அ - முதல் ஃ - வரை அழகு தமிழில் கற்றுக்கொடுப்பதே நோக்கம். பள்ளி கல்லூரி / மாணவர்கள் - மாணவிகள், தொலைதொடர்பு துறையில் பணியாற்றுபவர்கள், மற்ற துறையில் இருந்து தொலைதொடர்பு துறைக்கு வர விருப்புபவர்கள், இந்த துறையை வேலை
வாய்ப்புக்காக தேர்ந்தெடுப்பவர்கள் அனைவரும் வாசிக்கலாம்.

கேள்விகள் கேட்டு அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.முழுமையாக விளக்க தயாராக இருக்கிறோம்.

உங்கள் செல்லிடப்பேசி எப்படி வேலை செய்கிறது என்ற சாதாரன கேள்வியிலிருந்து லேயர் 1 மெசேஜ் (layer 1 message) - டெலகாம் பில்லிங் மென்பொருட்கள் (எடுத்துக்காட்டு வேண்டுமானால் kenan arbour மிக விலை உயர்ந்த ஒரு மென்பொருள்) எவ்வாறு பணியாற்றுகின்றன, உங்கள் செல்பேசியின் ஆர்க்கிடெக்சர் ( Architechture) என்ன, என்ன சிப்செட் (chipset) போடப்பட்டுள்ளது, அதன் வேலை என்ன ? என்று அனைத்தினையும் பார்க்கலாம்.

மேலும் நாங்கள் இப்போது பணியில் உள்ள மொபைல் டெஸ்டிங் தொழில் நுட்பம் ( mobile testing technology) - பற்றியும், வெவ்வேறு நிறுவனங்கள் உபயோகப்படுத்தும் வெவ்வேறு மென்பொருட்கள் பற்றியும் ( தொழில்நுட்ப காரணமாக மோட்டரோலா - வேறு மென்பொருள் உபயோகப்படுத்தும், எல்.ஜி வேறு மென்பொருள் உபயோகப்படுத்தும்) விரிவாக எழுத உள்ளோம்.

வெவ்வேறு தொலைபேசி சேவை (service provioder) / தொலை தொடர்பு கருவி தயாரிப்பு (mobile equipment vendor) நிறுவனங்களில் பணியாற்றும் என் நன்பர்கள் இதற்க்கு பேருதவியாக இருப்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..

அதற்க்காக முன்பே என் நன்றிகளையும் வணக்கங்களையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்..

அன்பர் பாலுசாமி, இந்த முயற்ச்சியை முன்னெடுத்து செல்ல பெரிதும் உதவியாக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்த நேரத்திலேயே அவருக்கு என் நன்றிகளை தெரிவிப்பதுதான் முறையான செயலாக இருக்கும்..நாமக்கல்லில் விவசாய குடும்பத்தில் பிறந்த பாலு - இன்றைக்கு எல்.ஜி நிறுவனமே வியக்கும் வண்ணம் - தொழில் நுட்ப அறிவில் சிறந்து விளங்குகிறார். அவருக்கு என் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி